பெட்டாலிங் ஜெயா,
ஹாங்காங் பொது பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடி, தன்னால் முடியும் என்பதை நிரூபித்துள்ளார் மலேசியாவின் டத்தோ லீ சோங் வெய்.சீனாவின் இரண்டு முறை உலக வெற்றியாளரான ஷென் லோங்கை 21-14, 21-19 என்ற புள்ளிகளில் சோங் வெய் சர்வ சாதாரணமாக தோற்கடித்து சாதனை படைத்துள்ளார்.
ஹாங்காங் பொது பூப்பந்து ஆண்கள் ஒற்றையர் போட்டி நேற்று ஹாங்காங் கொலிஸியத்தில் நடைபெற்றது. தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சோங் வெய் மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் வழி, வரும் டிசம்பர் 14 முதல் 18-ஆம் தேதி வரை துபாயில் நடைபெறவிருக்கும் உலக சூப்பர்சீரிஸ் இறுதிப்போட்டிக்கு அவர் தகுதியடைந்துள்ளார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்