கோலாலம்பூர்,
உலகக் கிண்ண வலைப் பந்துப் போட்டிக்கு தகுதி பெறுவதே எங்களின் இலக்கு என்று மலேசிய கூடைப்பந்து சங்கம் நேற்று கூறியது.அயர்லாந்து, ஹாங்காங், சுவிட்ஸர்லாந்து உட்பட பல முன்னணி அணிகள் பங்கேற்கும் வலைப் பந்துப் போட்டி வரும் டிசம்பர் 9ஆம் தேதி சிங்கப்பூரில் தொடங்கவுள் ளது.
சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமைச் சேர்த்த தேசிய வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்ள வில்லை. அவர்களுக்கு தற்காலிக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இப்போட்டியில் மலேசியாவின் இளம் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தவுள்ளனர்.அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஆசிய கிண்ண வலைப்பந்துப் போட்டி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றை பிடிக்கவேண்டும். அப்படி பிடித்தால் மட்டுமே 2019ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ண வலைப்பந்துப் போட்டியில் மலேசிய அணியினர் பங்கேற்க முடியும். அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் இவ்வீராங்கனைகளுக்கு தற்காலிக ஓய்வு வழங்கப்பட வேண்டும்.
Read More: malaysia Nanban News paper on 21.11.2017
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்