கோலாலம்பூர்,
ஈராக், ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய அணிகளின் சவால்களை எதிர்கொள்ள இறுதிவரை போராடுவோம் என்று தேசிய இளம் ஆட்டக்காரர் என். தனபாலன் நேற்று கூறினார். 23 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான ஏஎப்சி கிண்ண கால்பந்துப் போட்டி வரும் ஜனவரி மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக குலுக்கல் அண்மையில் நடைபெற்றது. இதில் சி பிரிவில் மலேசிய அணியினர் இடம் பிடித்துள்ளனர்.அப்பிரிவில் ஈராக், ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.இவ்வணிகளில் சவால்களை எதிர்கொள்ள டத்தோ ஓங் கிம் சுவீ தலைமையிலான தேசிய அணியினர் இப்போதே பயிற்சிகளை தொடங்கி விட்டனர்.
மலேசியாவை காட்டிலும் இம்மூன்று அணிகளும் கால்பந்து விளையாட்டில் பலம் வாய்ந்த அணிகளாக விளங்குகின்றன. ஆகையால் இப்போட்டி கடுமையான சவால்களுக்கு மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வேளையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தேசிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் என். தனபாலன் இப்போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
Read More: Malaysia Nanban News Paper on 27.10.2017