பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரபல கார் நிறுவனம் ஜீப் மற்றும் பரிசுத்தொகை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. பிரேசிலில் நடைபெற்று வரும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு மத்திய அரசும், மாநில அரசும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்து, சாக்க்ஷி மாலிக் மற்றும் தீபா கர்மாகர் ஆகியோருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது. தற்போது பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு எதுவும் கிடையாதா என பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர். அதன் பயனாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு மஹேந்திரா கார் நிறுவனம் ஜீப் மற்றும் பரிசுத்தொகையாக 10 லட்சம் ரூபாயும் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது. இதே போன்று சாக்க்ஷிமாலிக்கிக்கும், சிந்துவுக்கும் மஹேந்திரா நிறுவனம் கார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்