ஆசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் கௌரவத் தலைவராக டத்தோஸ்ரீ புலேந்திரன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய மாஸ்டர் பேராளர் மாநாடும் ஆசிய மாஸ்டர் பொதுக் கூட்டமும் சீனாவில் கடந்த வாரம் நடைபெற்றது. ஆசிய மாஸ்டர் ஓட்டப் பந்தயச் சங்கத்தில் 29 நாடுகள் அங்கம் வகிக் கின்றன. இதில் டத்தோஸ்ரீ புலேந்திரன் கௌரவத் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவப்பிரகாசம் சிவசம்பு கூறினார்.
முன்னாள் மலேசிய அனைத்துலக முன்னணி நீண்ட தூர ஓட்டக்காரரான டத்தோஸ்ரீ புலேந்திரனின் தேர்வு மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்று அவர் கூறினார். ஆசியாவின் கௌரவத் தலை வராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
அதே வேளையில் ஆசிய மாஸ்டர் சங்கத்திற்கு முழு ஆதரவும் உதவியும் வழங்குவதுடன் சங்கத்தின் மேம்பாட்டிற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தாம் தயாராக உள்ளதாக டத்தோஸ்ரீ புலேந்திரன் உறுதியளித்தார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்