பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களை வென்று ஹேமலா தேவி சாதனைபடைத்துள்ளார்.தென்கிழக்காசிய நாடுகளுக்கான 9ஆவது பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டி நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.11 நாடுகளில் 1,450 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
உபசரணை நாடான மலேசியா 103 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ச்சியாக போராடி வருகிறது.இதன் தடகள போட்டி யில் ஈட்டி எறிதல் பிரிவில் மலேசியாவை பிரதிநிதித்து ஹேமலா தேவி எனி குட்டி கலந்து கொண்டார். ஹேமலா தேவி ஈட்டியை 20.37 மீட்டர் வீசி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இப்பிரிவில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை தங்கப்பதக்கமும், வியட்நாம் வீராங்கனை வெண்கலப்பதக்கமும் வென்றனர். பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளிப்பதக்கம் வென்றது நினைத்து நான் பெருமைப்படுகிறேன். எனக்கு கடுமையான காய்ச்சலாக இருந்தாலும் வெற்றி பெறு வதற்காகவும் நாட்டிற்கு பெருமை தேடித் தருவதற்காகவும் எனக்கு நானே ஊக்கமளித்துக் கொண்டேன் என ஹேமலா தேவி தெரிவித்தார்.
READ MORE: MALAYSIA NANBAN NEWS PAPER ON 22.9.2017
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்