கோலாலம்பூர், அனைத்துலக ஹயாஷிஹா கராத்தே போட்டியில் மலேசிய போட்டியாளர்கள் அஸ்னவி, விக்னேஷ் பதக்கம் வென்று புதிய சாதனையைப் படைத் துள்ளனர்.8ஆவது ஹயாஷிஹா கராத்தே போட்டி கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் நடைபெற்றது. 18 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.நிர்வாகி தியாகு பொன்னையா தலை மையில் மலேசிய வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.கடுமையான சவால்களுக்கு மத்தியில் அவ்வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தி யுள்ளனர். பெண்களுக்கான 61 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய தேசிய வீராங்கனை அஸ்னவி வெண்கலப்பதக்கம் வென்றார். அதே போன்று ஆண்களுக்கான 60 கிலோ கிராம் குமித்தே பிரிவில் களமிறங்கிய தேசிய வீரர் விக்னேஷ் சுப்பையா வெண்கலப்பதக்கம் வென் றார். அனைத்துலக ரீதியில் இருந்து 18 நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மலேசியாவை சேர்ந்த அஸ்னவியும், விக்னேஷ் சுப்பையாவும் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றது மிகப் பெரிய சாதனையாகும் என்று தலைமை பயிற்றுநருமான மாஸ்டர் அறிவழகன் பொன்னையா கூறினார். இவ்விருவரின் சாதனை இளம் விளையாட்டாளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித் துள்ளது. அதே நேரத்தில் இன்னும் அதிகமான கராத்தே விளையாட்டாளர்கள் அனைத்துலக ரீதியில் சாதனைப்படைக்க வழிவகுத்துள்ளது.மலேசியாவில் ஹயாஷிஹா கராத்தே கழகத்தின் கீழ் நூற்றுக்கணக் கானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் அதிகமானோர் சிறுவர்களாவர். கடுமையான பயிற்சிகளில் இப்போட்டியாளர்கள் அனைவரும் அனைத்துலக போட்டியில் களமிறங்கும் அளவில் செதுக்கப்பட்டு வருகின்றனர். இம் முயற்சிகள் வரும் காலத்தில் மிகப் பெரிய சாதனைகளை கொடுக்கும் என்று அறிழவழகன் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே பேரின்பம் மலேசியா, ஹயாஷிஹா கராத்தே கழகமும் இணைந்து நடத்தி வரும் லீக் கராத்தே போட்டியில் அஸ்னவி, விக்னேஷ் ஆகிய இருவரும் ஜெமினி அணியில் விளை யாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்