கோலாலம்பூர் அனைத்துலக மாஸ்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் புரவலர் டத்தோஸ்ரீ புலேந்திரன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.சரவாவில் நடைபெற்ற 31ஆவது அனைத்துலக மாஸ்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் 12 நாடுகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியை சரவா மாநிலத்தின் முதலமைச்சர் டத்தோ அமார் அபாங் ஹாஜி அப்துல் ரஹ்மான் ஜொகாரி தொடக்கி வைத்தார். இந்தியாவை பிரதி நிதித்து 194 போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டதுடன் 55 தங்கம், 73 வெள்ளி, 26 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் புரவலர் டத்தோஸ்ரீ டாக்டர் வி. புலேந்திரன் 55-59 வயதுக்குட்பட்டவர்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 10,000 மீட்டர் ஓட்டப்போட்டியின் முன்னாள் வெற்றியாளரான டத்தோஸ்ரீ புலேந்திரன் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் பொது அனைத்துலக போட்டியின் 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற் றிய ஆசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் செயலாளர் சிவப்பிரகாசம் சிவசம்பு, நிதியுதவி வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்கிய சரவா மாநில அர சாங்கத்திற்கும் குறிப்பாக முதலமைச்சருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்