லண்டனில் நடைபெற்று வரும் உலக பாரா திடல் தடப் போட்டியில் மலேசிய வீரர் அப்துல் லத்தீப் ரோம்லி டி20 நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தார். மலேசியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை இரும்புக் குண்டு எறியும் போட்டியில் ஸியாட் ஜூல்கிப்லி வென்றார். அதனைத் தொடர்ந்து அப்துல் லத்தீப் 7.37 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது தங்க பதக்கத்தை மலேசியாவிற்கு வென்று பெருமை சேர்த்தார். தொடர்ந்து குரோஷியா சோரன் டலிக் என்பவர் 7.32 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி பதக்கமும் மற்றும் 7.12 மீட்டர் நீளம் தாண்டி டிமட்ரோ பரட்னி கோவ் வெண்கலப் பதக்கம் வென்றார்கள். அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியில் ஸியாட் மற்றும் லத்தீப் களம் இறங்கவிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்