நியூயார்க், காதலி கொடுத்த முத்தம் காரணமாக அமெரிக்காவின் ஒலிம்பிக் சாம்பியன் கில் ராபர்ட்ஸ் தடைக்கு தள்ளப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக் காவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர் கில் ராபர்ட்ஸ். 28 வயதாகும் இவர் கடந்த வருடம் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 4x400 தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளாரா என்பதை பரிசோதனை செய்வதற்காக மாதிரி எடுக்கப்பட்டது. அவரிடம் எடுக்கப் பட்ட மாதிரியை பரிசோதனை செய்யப்பட்டதில், தடை செய்யப்பட்ட மருந்தான புரொபெனெசிட்டை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் கடந்த மே மாதம் 5ஆம் தேதியில் இருந்து கில் ராபர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. புரோபெனெசிட் மருந்து இரத்தத்தில் யூரிக் ஆசிட் அதிகம் இருந்தால் பயன்படுத்தக்கூடியது. இரத்தத்தில் இருந்து சிறுநீரை அதிக அளவில் பிரித்து வெளி யேற்ற பயன்படும். ராபர்ட்ஸின் மாதிரியில் இந்த மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.பில் ராபர்ட்ஸின் காதலி அலெக்ஸ் சலாசர். ராபர்ட்ஸிற்கு பரிசோதனை மாதிரி எடுப்பதற்கு முன்பு சலாசர் சைனஸ் பிரச்சினை காரணமாக புரொபெனெசிட்டை பயன்படுத்தியுள்ளார். பரிசோதனை மாதிரி எடுக்கும் அன்று ராபர்ட்ஸ் தனது காதலிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் ராபர்ட்ஸ், தனது காத லிக்கு தொடர்ந்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அவரது உடலில் அந்த மருந்து சேர்ந்துள்ளது என்று அமெரிக்க தீர்ப்பாய அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்