கோலாலம்பூர், கலப்பு தற்காப்புக் கலை ஒன் சாம்பியன் போட்டியில் மலேசிய வீரர் அகிலன் தாணி களமிறங்கவுள்ளார்.ஒன் சாம்பியன் கலப்பு தற்காப்புக் கலை போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கோலாலம்பூர் ஸ்டேடியம் நெகாராவில் நடைபெறவுள்ளது. உலக வெல்டர் வெயிட் சாம்பியனான ரஷ்யாவின் மாராட் காவ்ரோவ், ஆஸ்திரேலிய வீரர் மார்டின் எங்குயினை சந்தித்து விளையாடவுள்ளார். இதில் மாராட் காவ்ரோவ் 15-0 என்ற வெற்றி பதிவுகளை கொண்டுள்ளார். அதே வேளையில் மார்டின் 8-1 என்ற வெற்றி பதிவுகளை கொண்டுள்ளார். இவ்விருவரும் களமிறங்கும் போட்டியே உலக மக்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. ஒன் சாம்பியன் போட்டிகள் மலேசியாவில் நடைபெறுவதால் நமது நாட்டை பிரதிநிதித்து 5 போட்டியாளர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளனர். அனைத்துலக ஒன் ஃபைட் சாம்பியன் போட்டியில் களமிறங்கி கலக்கிய செந்தூலைச் சேர்ந்த அகிலன் தாணி இப்போட்டியில் களமிறங்கவுள்ளார். இம் முறை அகிலன் தாணி எகிப்து நாட்டைச் சேர்ந்த ஷெரிப் முகமட்டை சந்தித்து விளையாடவுள்ளார். இதில் அகிலன் தாணி 7-1 என்ற வெற்றி பதிவுகளை கொண்டிருக்கும் வேளையில் எகிப்து வீரர் ஷெரிப் முகமட் 8-3 என்ற வெற்றி பதிவுகளை கொண்டிருக்கிறார். கடும் சவால்களுக்கு மத்தியில் அகிலன் தாணி இப்போட்டியில் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. அகிலன் தாணியை தவிர்த்து எவ் திங், சுபா பிரதர்ஸ், கியானி, கீனு ஆகியோரும் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்