சர்வதேச ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற உலகசாதனை படைத்தார் இந்திய அணியின் மிதலிராஜ். 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. அரைஇறுதியின் 4 இடங்களுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரிஸ்டலில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லேனிங் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி இந்திய அணி முத லில் பேட் செய்து வருகிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற உலகசாதனை படைத்தார் இந்திய அணியின் மிதலிராஜ்.மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து மிதிலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்சின் சாதனையை முறியடித்தார். 34 வயதாகும் மிதிலிராஜ் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்