புவனேஸ்வரம், புவனேஸ்வரத்தில் நடந்து வரும் ஆசிய தடகள போட்டியில் இந்தியா மேலும் 4 தங்கப்பதக்கங்களை வென்று பிரமாதப்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஆரோக்யராஜீவ் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். 22–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 2–வது நாளில் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை இந்தியா அள்ளியது. இந்த நிலையில் 3–வது நாளான நேற்றும் இந்தியாவின் ஆதிக்கம் நீடித்தது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், மழை தூறல்களுக்கு மத்தியில் ஓடிய இந்திய வீரர் முகமது அனாஸ் 45.77 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் ஆரோக்ய ராஜீவ் 46.14 வினாடிகளில் 2–வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். திருச்சியைச் சேர்ந்த ஆரோக்யராஜீவ் ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் பெண்கள் பிரிவிலும் இந்தியாவுக்கே மகுடம் கிட்டியது. அரியானா மங்கை நிர்மலா ஷெரோன் 52.01 வினாடியில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்திற்கு முத்தமிட்டார். வியட்னாம் வீராங்கனை குயாச்சி வெள்ளிப்பதக்கமும் (52.78 வினாடி), இந்தியாவின் ஜிஸ்னா மேத்யூ வெண்கலமும் (53.32 வினாடி) பெற்றனர். 1,500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு பிரிவிலும் இந்தியா கோலோச்சியது. இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் (3 நிமிடம் 48.85 வினாடி), பெண்கள் பிரிவில் கேரள புயல் பி.யு.சித்ராவும் (4 நிமிடம் 17.92 வினாடி) தங்கப்பதக்கத்தை கபளீகரம் செய்தனர். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் பாலின சர்ச்சையில் சிக்கிய ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்து வெண்கலப்பதக்கம் வென்றார். இந்தியா இதுவரை 6 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 14 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 2 தங்கம், 2 வெள்ளியுடன் அடுத்த இடத்தில் இருக்கிறது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்