மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 232.10 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.06 புள்ளிகள் சரிந்து 28,132.56 புள்ளிகளாக உள்ளது. வங்கி, தொழில்நுட்பம், ஐடி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எப்எம்சிஜி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.29% வரை குறைந்து காணப்பட்டன. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.30 புள்ளிகள் குறைந்து 8,643.00 புள்ளிகளாக உள்ளது. ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.05%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.79% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.40% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியா 0.09% குறைந்து முடிந்தது.