பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் கேரம் விளை யாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக் கான கேரம் போட்டி நேற்று பெட்டாலிங் ழூஜெயா சீபோர்ட் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது. சிலாங்கூரில் 20க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக மாணவர்கள் கேரம் விளையாட்டின் பயிற்சிகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிகளுக்கும் கேரம் போர்ட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ், போலீஸ் அதிகாரி ராஜன் முரளி பாலா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கேரம் பயிற்சிகள் வழங்கும் சிலாங்கூர் கேரம் சங்கத்தின் திட்டம் மகத்தானது என்று இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம். சரவணன் பாராட்டினார். கடந்த காலங்களில் மாணவர்கள் கையில் கைத்தொலைபேசிகள் இருக் காது. இதனால் ஓட்டம், கபடி, பூப்பந்து, கால்பந்து, பல்லாங்குழி உட்பட பல விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வந்தனர். இதனால் விளையாட்டுத்துறையிலும் நமது இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலை மாறுப்பட்ட நிலையில் உள்ளது என்றார் அவர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்