இந்த இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் மிகப்பெரிய சிறப்பம்சமாக பழம்பெரும் கேமரா தயாரிப்பாளரான லைகா உடன் இணைந்து செய்யப்பட்ட ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பு இடம்பெறுகின்றன. ஏற்கனவே இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றி கடந்த ஏப்ரல் மாதம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டூயல் லென்ஸ் கேமரா என்று அழைக்கக்கூடிய ஹவாய் பி9, ஹவாய் பி9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இரண்டு 12 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்டுள்ளது. டூயல் லென்ஸ் கேமராவில் f/2.2 அபெர்ச்சர் உள்ளடக்கியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களிலும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அதாவது, பேட்டரி, டிஸ்ப்ளே அளவு மற்றும் வகை, உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் நினைவகம் ஆகும். ஹவாய் பி9 ஸ்மார்ட்போனில் 423ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் முழு ஹச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ஹவாய் பி9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு ஹச்டி சூப்பர் Amoled டிஸ்ப்ளே மற்றும் இன்கார்பரேட் பிரஸ் டச் ப்ரெஷர் சென்சிடிவ் டெக்னாலஜி இடம்பெறுகிறது. ஹவாய் பி9 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம், 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு ஆகிய இரண்டு வகைகளிலும் கிடைக்கும். ஹவாய் பி9 ஸ்மார்ட்போனில் 3000mAh பேட்டரி திறன் மற்றும் ஹவாய் பி9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3400mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
உள்ள ரயுகு என்ற விண்கல்லின்
மேலும்ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா
மேலும்இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்
மேலும்