பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, தன் காதலி அன்டோனெல்லாவை இன்று திருமணம் செய்துகொள்கிறார். அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, தனது சாதுர்ய ஆட்டத்தால் எதிரணியினரைத் திணறடிப்பதில் வல்லவர். உலகள வில் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மெஸ்ஸி, தன் சிறுவயது தோழியும் காதலியுமான அன்டோனெல்லா ரோகு சோவை இன்று திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். மெஸ்ஸி - அன்டோனெல்லா ஜோடிக்கு தியாகோ (4 வயது), ஒரு வயதில் மேடியோ என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், காதலி அன்டோனெல் லாவை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த மெஸ்ஸி, சமீபத்தில் அதை வெளிப்படையாகத் தெரிவித்தார். இதையடுத்து, மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் இன்று திருமணம் நடக்க இருக்கிறது. இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு 260 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரபல கால்பந்தாட்ட வீரர்களான நெய்மர், லூயிஸ் சுவாரஸ், ஜெரார்ட் பிக், பிரபல பாப் பாடகி ஷகிரா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்
மேலும்ஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்
மேலும்சிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு
மேலும்