தஞ்சோங்மாலிம், மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் ஏற்பாட்டிலான மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகளை (சுக்கிம்) இந்த வருடம் பேரா மாநிலம் ஏற்று நடத்துகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எம்ஐஎஸ்சிஎப்பின் தலைவர் டத்தோ டி. மோகன், சுக்கிம் 2017க்கான துணை ஏற்பாட்டுக் குழுத்தலைவர் டத்தோ இளங்கோ ஆகியோர் தலைமையில் இந்தப் போட்டிகள் சார்ந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில், இந்த வருடம் சுக்கிம் 2017 தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் ஜூலை 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிமுக விழா விரைவில் நடைபெறும் எனவும் அவர் கூறினார். இந்த வருடம் 11 போட்டிகள் முறையே தேக்குவண்டோ, பூப் பந்து, டென்னிஸ், ஸ்குவாஷ், கராத்தே, ஓட்டப் போட்டிகள், கால்பந்து, சிலம்பம்,கபடி, ஹாக்கி, உடற்கட்டழகு போட்டிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநிலத்தை பிரதிநிதித்தும் ஒருங் கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதித்து இந்திரன் தங்கராசு, நெகிரி செம்பிலான் ஷண்முகம் சுப்பிரமணியம், கோலாலம்பூர் பாலகுமாரன், கெடா தியாக ராஜன் லெட்சுமணன், ஜொகூர் டத்தோ எம்.அசோகன், பினாங்கு கமலேஸ்வரன், பெர்லிஸ் வீரன் சுப்பிரமணி யம், பேரா டத்தோ இளங்கோ வடிவேலு, திரெங்கானு டாக்டர் மங்கலேஸ்வரன் அண்ணாமலை, கிளந்தான் திருமுருகன், மலாக்கா ஷண்முகம் பச்சை, பகாங் டத்தோ குணசேகரன் ராமன் ஆகி யோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் இந்திய விளையாட்டாளர்கள் இந்தப்போட்டிகளில் பங்கெடுப்பார்கள் என்று டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்