கோலாலம்பூர், சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வோம் என்று தேசிய ஹாக்கி அணியினர் சூளுரைத்துள்ளனர்.உலக ஹாக்கிப் போட்டியின் அரையிறுதி ஆட் டங்கள் லண்டனில் நடைபெற்றன.இப்போட்டியில் களமிறங்கிய மலேசிய அணியினர் நான்காவது இடத்தை பிடித்ததுடன் உலக ஹாக்கிப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர். இவ்வெற்றிக்கு பின் நாடு திரும்பிய மலேசிய அணியினருக்கு கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பின் தேசிய அணியின் தலைமை பயிற்றுநர் ஸ்டீபன் வான் உசேன் செய்தியாளர்களிடம் பேசினார்.உலக ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெற் றது மகிழ்ச்சியை அளிக்கும் அதே வேளையில் சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது தான் எங்களின் முதன்மை நோக்கமாக உள்ளது. தேசிய ஹாக்கி அணியில் 40 விளையாட்டாளர்கள் உள்ளனர். இதில் சிறந்த வீரர்களுக்கு சீ விளையாட்டுப் போட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும். அதனால் லண்டனுக்கு சென்ற 18 வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாது. ஒரு சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும்.ஆக மொத்தத்தில் சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்லவேண்டும் என்ற இலக்குடனேயே தேசிய அணி செயல்படும் என்று ஸ்டீபன் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்