சிப்பாங், உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெற்று மலேசிய அணியினர் புதிய சாதனையை படைத்துள்ளனர். உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் களமிறங்கிய மலேசிய அணியினர் பலம் பொருந்திய இந்தியாவையே வீழ்த்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து போட்டியின் 3, 4ஆவது இடங்களுக் கான ஆட்டத்தில் மலேசிய அணியினர் இங்கிலாந்து அணியை சந்தித்து விளை யாடினர். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியினர் 1-4 என்ற கோல் கணக்கில் உபசரணை நாடான இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டனர். இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும் மலேசிய அணியினர் இந்த அரையிறுதி போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தனர். இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வின் புவனேஸ்வரரில் நடை பெறும் உலக ஹாக்கிப் போட்டி யின் இறுதியாட்டத்திற்கு மலே சிய அணியினர் தகுதி பெற்று புதிய சாதனையை படைத்துள் ளனர். மலேசிய ஹாக்கி அணியினர் ஒரு காலக்கட்டத்தில் உலக அரங்கில் பல வெற்றிகளை குவி த்து வந் தனர். இடைக் காலத்தில் பெருமளவில் தோல்விகளை மட் டுமே மலேசிய அணியினர் பெற்று வந்தனர். ஆனால் தற் போது புத்துணர்ச்சியுடன் செயல் படும் மலேசிய அணியினர் உலக ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெற்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளனர். லண்டனில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தின் ஒட்டு மொத்த போட்டிகளின் வழி தேசிய அணியின் கோல்காவலர் எஸ். குமார் சிறந்த கோல் காவ லராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருதுகளும் வழங்கப் பட்டன. இதனிடையே உலக அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மலேசிய ஹாக்கி அணியினர் லண்டனில் இருந்து நேற்று முன்தினம் இரவு தாயகம் திரும்பினர். மலேசிய ஹாக்கி சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால், மூத்த உதவித் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஷாமளா சுப்பிரமணியம், உதவித் தலைவர் நகுலா சிவஜோதி, பொருளாளர் செல்வேந்திரன், வாரிய உறுப்பினர் டத்தோ அஹ்மட் நஜ்பி பின் அப்துல் ரசாக் உட்பட நூற்றுக் கணக் கான ரசிகர்கள் கேஎல்ஐஏ விமான நிலையத்தில் திரண் டதுடன் மலேசிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்