சிட்னி, ஆஸ்திரேலிய பொது பூப்பந்துப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிண்ணத்தை வென்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், ஆஸ்திரேலிய பொது சூப்பர் சீரிஸ் பூப்பந்துப் போட்டி நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் 11ஆம் நிலை வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் லாங்கை (6ஆவது இடம்) சந்தித்தார். துவக்கத்திலிருந்தே அசத்திய ஸ்ரீகாந்த் முதல் செட்டை 22-20 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத் திய இவர் 21-16 என வசப்படுத்தினார். 46 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், ஸ்ரீகாந்த் 22-20, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றினார். அபாரமாக செயல்பட்ட ஸ்ரீகாந்த் முதல் முறையாக சென் லாங்கை வீழ்த்தினார். இதற்கு முன், இருவரும் மோதிய 5 போட்டிகளிலும் சென் லாங்கே வென் றிருந்தார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்