கோலாலம்பூர், ஹயாஷி ஹா கராத்தே லீக் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டிச் சென்றனர். பேரின்பம் மலே சியாவுடன் இணைந்து ஹயாஷி ஹா கராத்தே கழகத்தினர் மாபெரும் லீக் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 7ஆவது முறையாக நடைபெறும் இந்த லீக் கராத்தே போட்டியில் 6 குழுக்கள் கலந்துக் கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தின. பல மாதங்களாக நடைபெற்ற இப்போட்டியில் களமிறங்கிய போட்டியாளர்கள் புள்ளிகளை சேகரித்து வந்தனர். அவ்வகையில் 81 புள்ளிகளை சேகரித்த பேரின்பம் மலேசியா அணியினர் ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பட்டத்தை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற இக்குழுவினருக்கு 4,000 வெள்ளி மதிப் புள்ள அன்பளிப்புகளும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது. இக்கராத்தே லீக் போட்டியின் முதல் சீசனில் பேரின்பம் அணியினர் வெற்றி பெற் றனர். அதன் பின் தற்போது அவ்வெற்றியை மீண்டும் பெற்றுள்ளனர். இக்குழுவினர் செப்டம்பர் மாதத்தில் சிறப்பு போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியா பயணமாகவுள்ளனர். இப்போட்டியில் 60 புள்ளி களை பெற்ற ஆர்எஸ் பிளன் அணியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர். இவ்வணியினருக்கு 2,000 வெள்ளி மதிப்புள்ள அன்பளிப்புகள் வழங்கப் பட்டது.இக்குழுவினர் விரைவில் சிங்கப்பூரில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். 59 புள்ளிகளை பெற்ற ஜெமினி அணியினர் இப்போட்டி யில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். தெனாகா சூர்யா, ஸ்பெக்ட்ரம், ஜூரிக் ஆகிய அணிகள் இப்போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டி யாளர்களுக்கு ஷியான் டி. பொன்னையா, தலைமை மாஸ்டர் அறிவழகன், பேரின்பம் மலேசியாவின் துணைத் தலைவர் ஜெயராமன், பாலன், காப்புறுதி முகவர் சூர்யா உட்பட பல பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்