நீலாய், பாஜம், நீலாய் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு யூனிக் பூப் பந்து கழகத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப் பட்டுவருகிறது என்று அதன் தலைமை பயிற்றுநர் சந்திரன் நேற்றுகூறினார். ஒரு காலக்கட்டத்தில் டத்தோ பஞ்சு குணாளன், ஜேம்ஸ் செல்வராஜூ உட்பட பல ஆட்டக்காரர்கள் பூப் பந்து விளையாட்டில் சிறந்து விளங்கி வந்தனர். இவர்களுக்கு பின் எந்தவொரு விளையாட்டாளர்களும் பூப்பந்து விளையாட்டில் பெரிதாக சாதிக்க வில்லை. இந்தியர்களுக்கு என நாட்டில் அதிகமான பூப்பந்து கிளப்புகள் உள்ளன. இதில் நமது மாணவர்கள் பங்கெடுத்து சிறப்பான திறனை வெளிப்படுத்தி வரு கின்றனர். இம்மாணவர்களின் திறன்கள் மலேசியாவை தவிர்த்து அனைத்துலக ரீதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதே வேளையில் அதிகமாக இந்திய மாணவர் களை பூப்பந்து விளையாட்டில் சாதனையாளர்க ளாக உருவாக்க வேண்டும் என்பது தான் யூனிக் பூப்பந்து கழகத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது. இக்கழகம் கடந்தாண்டு தோற்றுவிக்கப்பட்டது. தற் போது இக்கழகத்தின் வாயிலாக 100 மாணவர்கள் பூப் பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வருகின்றனர். பாஜம், நீலாய் தமிழ்ப்பள்ளி நிர்வாகங்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் எங்களின் முயற்சிகளுக்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றனர். நெகிரி செம்பிலானை தொடர்ந்து நாடு தழுவிய நிலையில் பயிற்சிகளை நடத்துவது தான் எங்களின் தூர நோக்கு சிந்தனையாக உள்ளது என்று சந்திரன் கூறினார். இந்திய மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு சொந்த பூப்பந்து அரங்கம் அமைக்க வேண்டும் என நாங்கள் முயற் சிகளை மேற்கொண்டு வரு கிறோம். சுமார் 45 லட்சம் வெள்ளியில் பல்நோக்கு மண்டபமாக இந்த அரங்கை கட்டு வதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கழகத் தின் தலைமை பயிற்றுநர்களில் ஒருவரான யசோதரன் செய்தியாளர்களிடம் கூறினார். இதனிடையே யூனிக் பூப்பந்து கழகத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நேற்று கேஎல்ஐஏ விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு பிரமுகராக ஜெகா கலந்துக் கொண்டு இக்கழகத்தின் நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததுடன், அதிகமான இந்தியர்கள் பூப்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்றார்.இதற்கு யூனிக் பூப்பந்து கழகம் தொடர்ந்து பாடுப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்