கோலாலம்பூர், ஜூலை 21- மலேசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் களமிறங்கிய ஜேடிதி அணியினர் இரு ஆட்டங்களில் சமநிலை கண்டனர். ஹங் ஜெபாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் போலீஸ்படை அணியை சந்தித்து விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டனர். ஜேடிதி அணியின் வெற்றி கோலை அம்ரி யாஹ்யா அடித்த வேளையில் போலீஸ்படையின் கோலை ஷாவுவான் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஜேடிதி 2 அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் சரவா அணியுடன் சமநிலை கண்டனர். கோலாலம்பூர் அணியினர் பகாங் அணியை சந்தித்து விளையாடினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலாலம்பூர் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பகாங் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். பேரா அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் பிகேஎன்எஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். நெகிரி செம்பிலான் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் மலாக்கா யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்