கோலாலம்பூர், தாய்லாந்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயப் போட்டியில் மலேசிய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றதுடன் தேசிய சாதனையை முறியடித்துள்ளனர். தாய்லாந்து பொது தடகளப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் பெண்களுக்கான 4x100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஷேரன் சாம்சோன், சித்தி பாத்திமா, எஸ். கோமளம், ஜைடாதுல் ஆகியோர் களமிறங்கினர்.மின்னல் வேகத்தில் ஓடிய இவர்கள் பந்தயத்தை 45.19 வினாடிகளில் முடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். அதே நேரத்தில் 4x100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியின் மலேசிய சாதனையையும் அவர்கள் முறியடித்துள்ளனர்.இதற்கு மலேசிய சாதனை நேரம் 45.32 வினாடிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சீ விளையாட்டுப் போட்டிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மலேசிய வீராங்கனைகளாக இவர்கள் மகத்தான சாதனையை படைத்துள்ளனர். இதே உத்வேகத்துடன் சீ விளையாட்டுப் போட்டியிலும் அவர்கள் தங்கப்பதக்கத்தை வெல்வார்கள் என்று அவர்களின் தலைமை பயிற்றுநர் எம். பால முரு கன் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்