ஈப்போ, ஜூலை 21- பேரா பொது ஓட்டப்பந்தயப் போட்டிகளில் களமிறங்கிய இந்திய வீரர்கள் வெற்றிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். பேரா பொது ஓட்டப்பந்தயப் போட்டி இங்குள்ள பேரா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜொகூர், சிலாங்கூர், பெர்லிஸ், சிங்கப்பூர், பேரா சுக்மா குழுக்கள், 15 விளையாட்டு மன்ற குழுக்கள் ஆகியவற்றை பிரதிநிதித்து போட்டியாளர்கள் இப்போட்டியில் களமிறங்கி தங்களின் திறனை வெளிப்படுத்தினர். பெண்களுக்கான 100மீ, 200 மீட்ட ஓட்டப் போட்டியில் கடற்படை அணியைச் சேர்ந்த கோமளம் ஷெல்லி வெற்றி பெற்றார். 400மீ ஓட்டப் போட்டியில் பேராவைச் சேர்ந்த ஷெரின் சாம்சன் வெல்லோபோய், 800மீ போட்டியில் ஜோஸ்லின் சாம்சம், 1500மீ போட்டியில் சிலாங்கூரைச் சேர்ந்த மணிஷா ஆகியோர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர். ஆண்களுக்கான 1500மீ ஓட்டப் போட்டியில் கடற்படை அணியைச் சேர்ந்த பிரபு தாஸ் முதல் நிலையில் வெற்றி பெற்றார். 5000மீ ஓட்டப் போட்டியில் கடற்படையைச் சேர்ந்த கிறிஸ்டபர் சூசை வெற்றி பெற்றார். நீளம் தாண்டும் போட்டியில் கிந்தாவைச் சேர்ந்த நவின்ராஜ் வாகை சூடினார். நாளை சரவாக்கில் தொடங்கவிருக்கும் சுக்மா விளையாட்டுப் போட்டிக்கு போட்டியாளர்கள் தயார்படுத்திக் கொள்ளும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது. அனைத்து போட்டியாளர்களும் சிறப்பான முறையில் இதில் வெற்றி பெற்று சுக்மா போட்டிக்கு தயாராகி உள்ளனர் என்று இப்போட்டியின் இயக்குநர் கோவிந்தராஜூ கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்