கோவா, ஜூலை 21- புட்சால் தொடரில் இருந்து கோவா அணி நட்சத்திர வீரர் ரொனால்டினோ பாதியில் விலகினார். இந்தியாவில் பிரிமியர் புட்சால் தொடர் நடக்கிறது. இதில் கோவா அணிக்காக நட்சத்திர வீரராக களமிறங்கினார் பிரேசிலின் ரொனால்டினோ. முதல் போட்டியில் சோபிக்காத இவர், பெங்களூரு அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் 5 கோல் அடித்து அசத்தினார். இதனிடையே இத்தொடரில் இருந்து ரொனால்டினோ திடீரென விலகி, நாடு திரும்பினார். இவருக்குப் பதில் மற்றொரு பிரேசில் வீரர் கபு, பங்கேற்கிறார். வரும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குபின் நடக்கும் பாராலிம்பிக் போட்டியின் தூதராக ரொனால்டினோவை பிரேசில் நியமித்தது. இது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், புட்சால் தொடரில் இருந்து விலகியுள்ளார். ரொனால்டினோ கூறுகையில், எனக்கு தூதர் அந்தஸ்து கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளனர். தேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திடீரென பிரேசில் செல்கிறேன். புட்சால் தொடரில் இருந்து இப்படி விலகுவது துரதிருஷ்டவசமானது. இருப்பினும் 2ஆவது சீசனில் கட்டாயம் பங்கேற்பேன் என்றார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்