img
img

முதல் சவாலுக்கு இந்தியா தயார்!
வியாழன் 21 ஜூலை 2016 14:35:45

img

ஆன்டிகுவா, ஜூலை 21- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.இதில் சாதிக்க இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆன்டிகுவாவில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் பங்கேற்ற இரு பயிற்சி போட்டிகள் டிரா ஆகின. தொடர்ந்து வீரர்கள் தீவிர பேட்டிங், பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். புஜாரா பவுலிங் செய்ய, ரோகித் சர்மா பேட்டிங் செய்தார். முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், கோஹ்லி, ரகானேவுக்கு இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி பவுலிங் செய்தனர். அடுத்து அஷ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா என, பவுலிங் செய்தனர். பின் அமித் மிஸ்ரா மட்டும், கும்ளே மேற்பார்வையில் நீண்ட நேரம் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார். உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் என, 3 பேர் மட்டும் பிறகு வந்து பவுலிங் செய்தனர். இந்திய அணியில் 5 பவுலர்கள் இடம் பெறுவர் எனத் தெரிகிறது. இதன் படி முரளி விஜய்க்கு ஜோடியாக தவான் அல்லது லோகேஷ் ராகுல் இணையலாம். ஆல் ரவுண்டராக ஸ்டூவர்ட் பின்னி அல்லது ஜடேஜா சேர்க்கப்படலாம். அல்லது இருவரையும் சேர்த்துவிட்டு, அமித் மிஸ்ராவுக்கு இடமில்லாமல் போகலாம். இந்திய வீரர் ரகானே கூறியது: ஆடுகளம் மந்தமாக காணப்படும் நிலையில் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக செயல்பட்டு ரன்கள் சேர்க்க வேண்டும். ஒன்று அல்லது இரு பேட்ஸ்மேன் அதிக ரன்கள் எடுத்தால் தான் பவுலர்களுக்கு போதிய கால அவகாசம் தர முடியும் என்று ரகனே கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img