பாரிஸ் பிரான்ஸ் பொது டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் அசத்திய இந்தியாவின் போபண்ணா, கனடாவின் கேப்ரியலா ஜோடி கிண்ணத்தை வென்றது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரான்ஸ் பொது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியாட்டத்தில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் கேப்ரியலா ஜோடி, கொலம்பியாவின் ராபர்ட் பரா, ஜெர்மனியின் அனா லெனா ஜோடியை எதிர் கொண்டது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போபண்ணா ஜோடி 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கிண்ணத்தை வென்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் டிமியாவை தோற்கடித்து இறுதியாட்டத்திற்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கரோலினா பலிஸ்கோவாவை தோற்கடித்தார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்