கோலாலம்பூர் சென்னையைச் சேர்ந்த ஃபேர்ஸ்ட் டச் கால்பந்து அகாடமியை சேர்ந்த வீரர்கள் நட்புமுறை ஆட்டங்களில் பங்கேற்பதற்காக மலேசியாவுக்கு வந்துள் ளனர். சிலாங்கூர் இந்தியர் விளையாட்டுப் பேரவையின் அழைப்பை ஏற்று இக்கால்பந்து அகாடமியைச் சேர்ந்த வீரர்கள் இங்கு வந்துள்ளனர். 16 வயதுக்கும் கீழ்ப்பட்ட வீரர்கள் இக்குழுவில் இடம் பிடித்துள்ளனர். அதே வேளையில் நமது நாட்டின் முன்னணி அணிகளுடன் மூன்று நட்புமுறை ஆட்டங்களிலும் பங்கேற்கவுள்ளனர். முதல் ஆட்டத்தில் மீபாவின் 16 வயதுக்கு கீழ்ப் பட்ட அணியை சென்னை அணியினர் சந்தித்து விளையாடவுள் ளனர். இவ்வாட்டம் இன்று ஜூன் 3ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நீலாய் இஸ்லாமிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் நடை பெறவுள்ளது. இரண்டாவது ஆட்டத்தை ஷாஆலம் இளையோர் கால்பந்து அகாடமி வீரர்களை சந்தித்து விளையாடவுள்ளனர்.இவ்வாட்டம் ஜூன் 4ஆம் தேதி ஞாயிற் றுக்கிழமை ஷாஆலம் மாட்சூஷிதா அரங்கில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சிஐஎம்பி அணியை சென்னை அணி யினர் சந்தித்து விளையாடவுள்ளனர். இவ்வாட்டம் தாமான் மெலாவத்தி கேஎல்எப்ஏ கால்பந்து அகாடமியில் நடைபெறவுள்ளது. ஆகவே இவ்வாட்டங்களை பொதுமக்கள் திரளாக வந்து பார்ப்பதுடன் ஆட்டக்காரர்களுக்கு முழு உற்சாகத்தை அளிக்க வேண்டும் என்று சிலாங்கூர் இந்தியர் விளையாட்டுப் பேரவையின் தலைவர் மூ.சு மணியம் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்