மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58.07 புள்ளிகள் உயர்ந்து 27,804.73 புள்ளிகளாக உள்ளது. உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ மற்றும் சுகாதாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.68% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17.25 புள்ளிகள் அதிகரித்து 8,525.95 புள்ளிகளாக உள்ளது. ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.57% மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 0.63% வரை சரிந்துள்ளபோது, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.47% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியா 0.09% அதிகரித்து முடிந்தது.