கராத்தே விளையாட்டின் கடுமையான பயிற்சிகள் எங்களை அவ்விளையாட்டில் சாதிக்கத் தூண்டுகிறது என்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். கோல சிலாங்கூர் சுங்கை தெராப் தமிழ்ப்பள்ளியில் பயிலும் நான் கடந்த ஓராண்டுகளாக கராத்தே பயிற்சிகளை பெற்று வருகிறேன்.மாஸ்டர் சூர்யா தலைமையில் இப்பயிற்சிகள் எங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இலவசமாக பயிற்சிகள் வழங்கப்பட்டாலும் அவ்வகுப்புகளுக்கு இடை விடாமல் சென்று பயிற்சிகளை பெற்று வருகிறேன். கராத்தே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்பயிற்சிகள் மூலம் எனக்கு கிடைக்கிறது என்று 11 வயது மாணவியான ஷாலினி ராஜா கூறினார். கராத்தே விளையாட்டில் மஞ்சள் நிற பட்டையை நாங்கள் பெற்றுள்ளோம். இதற்கு எங்களின் பயிற்சியாளர்கள் வழங்கும் பயிற்சிகள் தான் முக்கிய காரணமாக உள்ளது. வரும் காலங்களில் இப்பயிற்சிகளை தொடர்ந்து பெருவதுடன் அதிக வெற்றிகளை கராத்தே விளையாட்டில் பெற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமாக உள்ளது என்று சுங்கை திங்கி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஜனனி சண்முகம், மகாலட்சுமி பாலசுப்பிரமணியம், மாதவன் செல்வமணி ஆகியோர் கூறினர். கராத்தே விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் முன்பு அதற்கான களம் எங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது அப்பயிற்சிகள் எங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கராத்தே விளையாட்டில் சாதிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று கம்போங் பாரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல் வகுமார் முருகன், நைகல் கார்டன் தோட்டத் தமி ழ்ப்பள்ளியைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி, லாடாங் மூசா தமிழ்ப்பள் ளியைச் சேர்ந்த வசீ கரன் ஆகி யோர் கூறினர். இதனிடையே பேரின்பம் மலேசியா இயக்கத்தின் முயற்சியில் கோலசிலாங் கூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 6 தோட்டத் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு இலவசமாக கராத்தே வகுப்புகளை கடந்த ஓராண்டுக் காலமாக வழங்கி வருகின்றனர்.இப்பயிற்சிகளில் சிறந்து விளங்கும் 35 மாணவர் களை தேர்வுசெய்து அவர்களுக்கு மேலும் பல சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ் வகையில் அடுத்த 5 நாட்களுக்கு பத்துகேவ்ஸ் சிவா னந்தா ஆசிரமத்தில் இந்த 35 மாணவர்களும் கராத்தே பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். மாஸ்டர் அறிவழகன் தலைமையில் சூர்ய பிரகாஷ் ராவ், பாலசுந்தரம், ராஜேந்திர குமார், விமல் சுப்பிரமணியம், சூர்யா ஆகியோர் இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். நேற்றைய தொடக்க விழாவில் பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன், தலைமை செயலாளர் எஸ். குபேரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்