புக்கிட் மெர்தாஜம் பளுதூக்கும் போட்டியில் புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி த. துர்க்காஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.பினாங்கு மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாணவி துர்க்காஸ்ரீ 45 கிலோ கிராம் எடை கொண்ட போட்டியில் அம்மாணவியை விட வயது முதிர்ந்த மாணவர்களை காட்டிலும் 22.5 எடையை தூக்கி தங்க பதக்கம் வென்றதுடன், அப்பிரிவில் சிறந்த போட்டியாளருக் கான சிறப்பு விருதையும் வென்று தமது பள்ளியான புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள் ளிக்கும் அவர் பெருமை சேர்த்தார். இந்த பளுதூக்குப் போட்டி நிகழ்வை பினாங்கு மாநில குற்றத்தடுப்பு அறவாரியத் தின் துணைத் தலைவரும், சமூக சேவையா ளருமான டத்தோ கே.ஆர். புலவேந்திரன் அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்தார்.இந்த பளுதூக்கும் போட்டியை ஏற்பாடு செய்த மாஸ்டர் தனசிங்கம் மணியம் குறிப் பிடுகையில்,நாட்டில் உள்ள 14 மாநிலங்களில் பினாங்கு மாநிலத்தில் மட்டும் இந்தியப் பெண்கள் பளுதூக்கும் போட்டியில் பயிற்சி பெறுவதற்கான மையம் புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளி வழங்கி யிருப்பதாக குறிப் பிட்ட அவர், அப்பயிற்சி மையத்தில் போதிய பயிற்சி வழங்க பொருளாதார சிக் கல் களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டார். அதனை களைய போதிய உதவிகளை வழங்க முன் வந்தால் அதனை மனம் முவந்து ஏற்பதுதான்,அதிகமான இந்திய இளம் பெண்களை பளுதூக்கும் போட்டியில் பங்கெடுக்க செய்து சாதனை புரிய வைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்