கோலாலம்பூர் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் மலேசியர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று அகிலன் தாணி கூறினார்.(Mixed Martial Arts) எனப்படும் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியின் அனைத்துலக ஒன் ஃபைட் சாம்பியன் போட்டி வரும் மே 26ஆம் தேதி சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முதல் முறையாக மலேசியாவை பிரதிநிதித்து அகிலன் தாணி களமிறங்கவுள்ளார்.செந்தூலைச் சேர்ந்த அகிலன் தாணி எம்எம்ஏ போட் டிகளில் பல வெற்றிகளை குவித்துள்ள நிலையில் தற்போது அனைத்துலக ஒன் ஃபைட் சாம்பியன் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.இம்மாபெரும் போட் டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவைச் சேர்ந்த பென் அஸ்க்ரெனை எதிர்த்து அகிலன் களமிறங்கவுள்ளார். அனைத்துலகப் போட்டியில் 15 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பென் அஸ்க்ரென் அகிலன் தாணிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளார்.அதே வேளையில் பென் அஸ்க் ரெனுக்கு உலகளாவிய நிலையில் ஆதரவுகள் வலுத்து வருகின்றன.இருந்த போதிலும் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் மலேசியர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் எனும் இலக்குடன் அப்போட் டியில் களமிறங்கவுள்ளதாக அகிலன் தாணி கூறியுள்ளார். சிறுவயது முதல் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் முழு நாட்டத்தை கொண்டிருக்கும் அகிலன் தாணி தனது முழு ஆற்றலை நிரூபிக்கும் களமாக சிங்கப்பூர் போட்டி விளங்குகிறது.இப்போட்டியில் அவர் நிச்சயம் வெற்றி பெற்று மலேசியாவுக்கும் அவரின் தந்தைக்கும் பெருமை சேர்ப்பார் என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்