ஈப்போ மிஸ்டர் பினாங்கு உடல் கட்டழகர் போட்டியின் ஜூனியர் பிரிவில் இரண்டாவது பரிசும், 70 கிலோ வெந்தர் வெயிட் பிரிவில் மூன்றாவது பரிசும் வென்று வீரனேஸ்வரன் குணசீலன் சாதனை படைத்துள்ளார்.பினாங்கு புக்கிட் ஜம்புல் கோல்ப் ரிசோர்ட்டில் நடைபெற்ற ஜூனியர் உடல் கட்டழகர் போட்டியில் பங்கேற்பதற்காக வீரனேஸ்வரன் தாசேக் போடி மசல் பிட்னஸ் ஜிம் செண்டர் உரிமையாளர் குணசேகரனிடம் ஓராண்டு பயிற்சியை பெற்றார். ஜூனியர் பிரிவில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் வீரனேஸ்வரனுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.அதே வேளையில் 70க்கும் 75 கிலோவுக்கும் இடைப்பட்டவர்களுக்கான போட்டியில் மூன்றாவது பரிசை வீரனேஸ்வரன் வென்றார். இந்திய இளைஞர்களை உடல் கட்டழகர்களாக உருவாக்குவதில் தனது மையம் தயாராக உள்ளது என்று பயிற்சியாளர் குணசேகரன் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்