இந்தோனேசியாவின் சுரபாயாவில் நடைபெற்ற அனைத்துலக பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் எஸ்.கிஷோனா மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அவர் 10 -21, 21 - 16, 21 - 19 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவில் அனுபவம் வாய்ந்த கிரிஜோரியா மாரிஸ்கோ துன் ஜோங்கை வீழ்த்தினார். இந்தோனேசியாவில் அதன் சொந்த ரசிகர்களின் முன்னிலையில் அவர்களின் ஆட்டக்காரரை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களது மண்ணில் இந்த வெற்றியைப் பதிவு செய்து அனைத்துலக ரீதியில் மலேசியாவுக்கு பேட்மிண்டன் உலகில் நற்பெயரைத் தேடித் தந்ததற்காக தாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக நெகிரி செம்பிலானைச் சேர்ந்த கிஷோனா தெரிவித்தார். எனது இந்த வெற்றியை எனது தாயார் வளர்மதிக்கு அன்னையர் தின வெற்றியாக சமர்ப்பிக்கிறேன் என கிஷோனா தெரிவித்தார். பேட்மிண்டன் உலகில் தொடர்ந்து சாதனை படைப்பதற்கு சுரபாயாவில் நடைவெற்ற போட்டியில் அடைந்த வெற்றி தமக்கு நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்