img
img

பேரா இந்தியர் பொது பூப்பந்துப் போட்டி ஒற்றையர் பிரிவில் இளவரசி வெற்றி!
புதன் 03 மே 2017 12:03:50

img

(ஈப்போ) பேரா இந்தியர் பொது பூப் பந்துப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த செரன் டேவ், பிஜே பகுதியைச் சேர்ந்த இளவரசி வெற்றி வாகை சூடினார்கள். நேற்று இங்குள்ள மாஸ்டர் பேட்மிண்டன் விளையாட்டு அரங்கத்தில் 40ஆவது பொது பூப்பந்துப் போட்டியை பேரா இந்தியர் பூப்பந்து மன்றம் ஏற்று நடத்தியது. சுமார் 700க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் இதில் பங்கேற்றனர். மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறுதிப் போட்டியை காண ஆர் வலர்கள் மண்டபத்தில் திரண்டிருந்தனர். ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் பினாங்கைச் சேர்ந்த செரன்டேவ், பிஜேவைச் சேர்ந்த ராஜேஸ் போட்டியிட்டனர். இதில் செரன்டேவ் வெற்றி பெற்றார். பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் பிஜேவைச் சேர்ந்த இளவரசி ஈப்போ விபனாவை சந்தித்தார். இதில் நடப்பு வெற்றியாளர் விபனாவை இளவரசி தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். இரட்டையர் பிரிவு தெலுக் இந்தானைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் முகுந்தன், முகிலன் வெற்றி பெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் ஈப் போவைச் சேர்ந்த ஈஸ்தர் ரத்னா தேவி, எஸ்.பிரேமலதா வெற்றி பெற்றனர். 18 வயதுக்கும் கீழ்பட்டவர்களுக்கான போட்டியில் ஒற்றையர் பிரிவில் கிளந்தானைச் சேர்ந்த எஸ்.முகிலன் வெற்றி பெற்றார். இரட்டையர் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த தனசேகரன், சுகேந்திரன் வெற்றி பெற்றனர். மொத்தம் 22 பிரிவுகளுக்கான போட்டியில் 10 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் பிரிவில் தைப்பிங்கைச் சேர்ந்த வெக்கட் ராவ், பெண்கள் பிரிவில் பிஜேவைச் சேர்ந்த நிலாஷா, 12 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் ஆண்கள் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த தமிழரசு குமார் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஈப்போவைச் சேர்ந்த வாணி கோபி வெற்றி பெற்றார். 15 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் ஆண்கள் பிரிவில் கூலிமைச் சேர்ந்த எஸ்.சுனேசன் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிஜேவைச் சேர்ந்த எஸ்.பணிமலர் வெற்றி பெற்றார். வெற்றியாளர்களுக்கு பேரா சட்டமன்ற சபாநாயகர் தங்கேஸ்வரி சுப்பையா, பேரா மகளிர் தலைவி தங்கராணி பரிசுகள் எடுத்து வழங்கினார்கள். பேரா இந்தியர் பூப்பந்து மன்றத்தின் தலைவர் என்.லோகநாதன் கடந்த 40 ஆண்டுகள் இடைவிடாது இப்போட்டியை நடத்துவதற்கு ஆணிவேராக இருந்து வரும் மன்றத்தின் செயல் குழுவின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img