தைப்பிங்கில் நடைபெற்ற தேக்குவாண்டோ போட்டியில் யூனிஸ் ஸ்ரீ, லியா ஆகிய இருவரும் சிறந்த வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர். தேக்கு வாண்டோ விளையாட்டில் மாணவ, மாணவிகளின் ஆற்றலையும், திறமையையும் வெளியே கொண்டு வரும் வகையில் மாபெரும் போட்டி ஒன்று தைப்பிங்கில் நடைபெற்றது. நாடு தழுவிய நிலையில் இருந்து 719க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 9 வயது முதல் 12 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றதுடன் தங்களின் திறனையும் வெளிப்படுத்தினர். இதில் அதிகமான இந்திய போட்டியாளர்களும் கலந்து கொண் டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் யூனிஸ் ஸ்ரீ த/பெ சுகுமாரன், லியா த/பெ குமார் ஆகிய இருவரும் முதல் நிலையில் சாம்பியன் பட் டத்தை தட்டிச் சென்றனர். அதே வேளையில் இப்போட்டியின் சிறந்த வீராங்கனைகளாகவும் இவ்விருவரும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்ப்பள்ளியில் பயிலும் இவ்விரு மாணவிகளின் சாதனைகளைக் கண்டு அவர்களின் பெற்றோர்களும், பார்வையாளர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்