img
img

பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி: கும்ப்ளேவும் விண்ணப்பித்ததால் பரபரப்பு
புதன் 15 ஜூன் 2016 12:37:01

img

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவும் விண்ணப்பித்துள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடருடன் இந்திய அணி பயிற்சியாளர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களை நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கெடு ஜூன் 10ம் தேதியுடன் முடிவடைந்தது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணி முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி, தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பட்டீல், முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் உள்பட மொத்தம் 57 பேர் விண்ணப்பித்துள்ளதாக பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் கேப்டனும் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளருமான அனில் கும்ப்ளே (45 வயது) தனது விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளதை வாரிய நிர்வாகி ஒருவர் உறுதி செய்தார். ரவிசாஸ்திரி, சந்தீப் பட்டீல், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோருடன் கும்ப்ளேவும் போட்டியில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுடன் வெளிநாட்டை சேர்ந்த டேவ் வாட்மோர், கில்லஸ்பி, ஸ்டூவர்ட் லா ஆகியோரும் போட்டியில் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமைக்குரிய கும்ப்ளே (619 விக்கெட்), ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டையும் சாய்த்த சாதனை உள்பட பல்வேறு சாதனைகளை படைத்தவர். ஓய்வு பெற்ற பிறகு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி சேர்மன், பிசிசிஐ தொழில்நுட்பக் குழு தலைவர், தேசிய கிரிக்கெட் அகடமி சேர்மன் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். தர்மசாலாவில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில், புதிய பயிற்சியாளர் யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img