லண்டனில் நடை பெறும் உலக தடகளப் போட் டிக்கு தேசிய வீரர் நவ்ராஜ் சிங் தேர்வாகி புதிய சாதனையை படைத்துள்ளார்.உலக தடகளப் போட்டி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை லண்டனில் நடைபெற வுள்ளது. இப்போட்டிக்கு நாட்டின் முன்னணி உயரம் தாண்டுதல் வீரர் நவ் ராஜ் சிங் தேர்வாகியுள்ளார். சிங்கப்பூரில் நடை பெற்று வரும் தடகள போட்டியில் களமிறங் கியுள்ள நவ்ராஜ் சிங் 2.30 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். அதே வேளையில் உயரம் தாண்டுதல் போட்டியில் தேசிய சாதனையை நவ்ராஜ் சிங் முறிய டித்துள்ளார். இச்சாதனையின் அடிப்படையில் அவர் உலக தடகள போட்டிக்கு முன்னேறியுள்ளார்.உயரம் தாண் டுதல் போட்டி யில் 2.30 மீட்டர் உயரம் தாண்ட முடிந்தது குறித்து இந் நேரம் வரை என்னால் நம் பவே முடியவில்லை. இருந்த போதிலும் அச்சாத னையை பதிவு செய்துள்ளதுடன் உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். இது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே வேளையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜப்பான் போட்டி உட்பட பல முக்கிய போட்டிகளில் களமிறங்கி தங்கப்பதக்கம் வெல் வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராகி வருகிறேன் என்று நவ்ராஜ் சிங் செய்தியாளர்களிடம் கூறினார். இதனிடையே சிங்கப்பூர் தடகளப் போட்டியில் புதிய சாதனையை பதிவு செய்துள்ள நவ்ராஜ் சிங்கிற்கு மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோ கரிம் இப்ராஹிம் 5,000 வெள்ளி ஊக்குவிப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்