சீ விளையாட்டுப் போட்டியின் கராத்தே பிரிவில் சாதித்து தங்கப்பதக்கங்கள் வெல்ல இந்திய இளம் சிங்கங்கள் தயாராக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தேசிய கராத்தே துணை அணி யின் பயிற்றுநர் மகேந்திரன் சுப்பிரமணியம் நேற்று கூறினார். சீ விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை புக்கிட் ஜாலில் விளையாட்டு அரங்கம் உட்பட பல இடங்களில் நடைபெறவுள்ளது. மலேசியா உபசரணை நாடு என்பதால் இப்போட்டியில் களமிறங்கி தங்கப்பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் மலேசிய போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர். அவ்வகையில் சீ போட்டியில் நாட் டிற்கு அதிக தங்கப்பதக்கம் கிடைக்கும் விளையாட்டாக கராத்தே விளங்கி வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு மியன்மாரில் நடைபெற்ற சீ போட்டியின் கராத்தே பிரிவில் மலேசிய அணியினர் 7 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களை வென்று முதல் இடத்தையும் பிடித்தனர். 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் கராத்தே சேர்க்கப்படவில்லை. ஆனால் இவ்வாண்டு கோலாலம்பூரில் நடைபெறும் சீ போட்டி யில் கராத்தேவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விளையாட்டாளர்கள் பல சாதனைகளை படைக்க கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் தயாராகி வருகின்றனர். கராத்தே பிரிவில் முதன்மை தேசிய அணி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் துணை அணியில் இடம் பிடித்த வீரர்களும் சீ போட்டியில் களமிறங்குவ தற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. கோகுல் நாத், மாதுரி, பொன்னரசு, மதிவாணி, அரவிந்தன், ரவின், புவனேஸ்வரன் உட்பட 10 வீரர்கள் துணை அணியில் இடம் பிடித்துள்ளனர். என்னுடன் இணைந்து ஹானி கிஸ்தா இந்த 10 பேருக்கும் கடுமை யான பயிற்சி களை வழங்கி வருகிறோம் என்று மகேந்திரன் கூறினார். இவர்கள் அடுத்தடுத்து நடைபெறும் மூன்று முக்கிய போட்டிகளில் களமிறங்கி தங்களின் திறனை வெளிப்படுத்தவுள்ளனர். மிகச் சிறந்த திறனை வெளிப் படுத்தும் போட்டியாளர்களுக்கு சீ விளையாட்டுப் போட்டியில் களமிறங்கவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆக மொத்தத்தில் இவ்வாண்டு சீ விளை யாட்டுப் போட்டியின் கராத்தே பிரிவில் இந்திய சிங்கங்கள் நிச்சயம் அதிரடி படைப்பார்கள் என்று மகேந்திரன் நம்பிக்கையுடன் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்