‘எந்த விஷயமாக இருந்தாலும் அதில் பல தடங்கல்களைச் சந்திப்பது இயல்புதான். ஆனால், அதுவே உனக்குப் பிடித்த துறையாக இருந்தால் தடங்கல் களை வெற்றியின் படிகளாக மாற்றிக்கொள்!’ நானே என் மீதான நம்பிக் கையை இழந்துநின்ற சூழ் நிலையில் என் தாயார் எனக்குக் கொடுத்த நம்பிக்கை வார்த்தை இது. கெடா, கூலிமைச் சேர்ந் தவர் ஸ்ரீ சர்மினி சேகரன். நாட்டின் கராத்தே தேசிய அணியில் மெல்ல சிறகு விரித்து இருப்பவர். கராத்தேயில் குமிதே வகை யில் தனது பயணத் தைத் தொடங்கி உள்ள சர்மிக்கு இப்போது 25 வயது. மலேசிய புத்ரா பல் கலைக்கழகத்தில் முழுநேர மாக ஊடகத்துறையில் இளங் கலைப் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தாயார் செல்வராணி முனுசாமிதான் இவரின் கராத்தே ஆர்வத்திற்கு வித்திட்டவர். தனித்து வாழும் தாயார். பாலர்பள்ளி ஆசிரியை. தொடக்கத்தில் கராத்தே பயில குறைவான ஆர்வத்தை வெளிப்படுத்தி யவரை மெல்ல மெல்ல தூண்டி ஊக்கம் அளித்து வந்தார். வீட்டில் ஒரே பிள்ளை. அதுவும் பெண் குழந்தை. இந்த உலகத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் பல சவால்க ளைத் துணிவோடு எதிர் கொள்ள வேண்டும். வெறும் கல்வியோடு வீட் டில் அவளை அடக்கி வைத்திருந்தால் எதுவும் சாத்தியப்படாது என்று அவரின் தாயார் செல்வராணி சிந்தித் ததன் பயனே, இன்று கராத்தே தேசிய அணி யில் சர்மினியின் பயணம். 13 வயதிலிருந்து கராத்தே பயிலத் தொடங்கி யவருக்கு 16 வயதில் தலைநகரில் உள்ள தேசிய விளையாட்டுப் பள்ளியில் கல்வியைத் தொடர வாய்ப்பு கிடைக்கிறது. மகள் சுதந்திரமாகவும் துணிவாகவும் வளர வேண்டும் என்பதற்காகக் கராத்தே கற்க சர்மினிக்கு ஆர்வம் தந்த செல்வராணியின் தாயுள்ளம், இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தபோது பாசத்தால் கொஞ்சம் தடுமாறுகிறது. மகளைப் பல கிலோமீட்டருக்கு அப்பால் அனுப்ப வேண்டுமா? பல நாட் களுக்கு மகளைப் பிரிந்து இருக்க வேண்டுமா? இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால், மகளின் வளர்ச்சி இந்த எல்லையோடு மட்டுமே சுருங்கி விடும். மக ளின் பொருட்டு அவள் மீதான பாசத் தையும் தியாகம் செய்யத் துணிந்தார். அவரைச் சர்மினி யின் மாஸ்டர் தியாகராஜன் சமாதானம் செய்தார். தலைநகருக்கு வந்து கரா த்தே பயணத்தை மேற் கொண்டு தொடர்வதற்கு அம்மா என் மீது வைத்திருக் கும் நம்பிக்கையே முக்கிய காரணம் என்கிறார் சர்மினி. உலகச் சாம்பியன் போட்டி, உலகப் பிரீமியர் போட்டி, சுகிப், தாய்லாந்து, வியட்ந ஆகிய நாடுகளில் நடைபெற்ற பொது கராத்தே போட்டிகள், ஜப்பானில் நடைபெற்ற ஆசி யன் சீனியர் கராத்தே சாம்பி யன் போன்ற போட்டி களில் கலந்துகொண்டு பல பதங்களை வென்றுள்ளார். இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கராத்தே சாம்பியன் போட்டி யில் இருமுறை பங்கேற்று உள்ளார். 2014ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற் றார். முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார். இருப்பினும், நம் பிக்கையை இழக்கவில்லை. கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடை பெற்ற உலக சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு அரையிறுதி வரை முன் னேறிச் சென்றார். இந்த உலக சாம்பியன் போட்டியில் ஒருமுறை யாவது வென்று உலக சாம்பியனாக ஆக வேண்டும் என்பதுதான் தன்னுடைய கராத்தே பயணத்தில் முக்கிய இலக்கு என்கிறார் சர்மினி. அதுமட்டுமின்றி, ஒலிம் பிக்கில் இப்போதுதான் கராத் தேவும் இணைக்கப்பட்டுள் ளது. எனவே, நம் நாட்டைப் பிரதிநிதித்து பதக்கம் வெல்ல வேண்டும் என்பதும் தன் வாழ்நாள் இலக்கு களில் ஒன்று. இதற்கு சீ கேம்ஸ் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளேன். எனவே, இந்த ஆண்டு நடை பெறும் சீ கேம்ஸில் அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இப்போதே என்னைத் தயார்படுத்தத் தொடங்கிவிட்டேன். சர்மினியின் கராத்தே பய ணம் இப்படிச் சென்று கொண் டிருக்கையில், இளங்கல்விப் பட்டப்படிப்பைத் தொடர அவ ருக்கு உயர்கல்வி அமைச்சு வாய்ப்பும் உபகாரச் சம்பளத்தையும் வழங்கியது. அதன் அடிப்படையில், இப்போது அவர் மலேசிய புத்ரா பல் கலைக்கழகத்தில் இளங் கலைப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். கராத்தேவிற்கு அப்பாற்பட்ட நிலையில் தொலைக்காட்சித் தொகுப்பாளராக வேண்டும் என்பது அவரின் ஆசையாகும். ஆனால், இவை எல் லாம் கராத்தேவிற்குப் பிறகுதான்! சில முக்கியமான போட்டி களில் கலந்துகொள்ள வேண்டிய சூழ் நிலையில் அவரின் விரிவுரையாளர்கள் கல்வி விவகாரத்தில் மிகவும் உறுதுணையாக இருந்து அவரின் கராத்தே ஆர்வத்திற்கு மேலும், ஊக்கம் அளித்து வருவதாகவும் அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வெற்றிப் பய ணத்தில் முக்கிய பங்கு உள்ளது எனவும் என் சாதனைக ளுக்காக உழைத்த அனைவ ருக்கும் என்னுடைய நன்றிகள் என சர்மினி குறிப்பிட்டார். என்னுடைய வாழ்க் கையில் முதல் முன்னுதாரணம், என் அம்மாதான்! அவ்வளவு எளி தாக எதிலும் விட்டுக் கொடுத் துவிடமாட் டார். என் மீது என்னை விட அவருக் குத்தான் நம்பிக்கை அதிகம். அன்று அவர் என் மீதுள்ள பாசத்தின் காரண மாக என்னை வெளியில் செல்ல அனுமதித்து இருக் காவிட்டால் என்னுடைய கராத்தே பய ணமே தொடங்கி இருக்காது. தனியாளாக நின்று என்னை வளர்த்து எனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக் கிக்கொள்ள துணைநிற் பவர் அவர்தான். அடிக்கடி என்னைச் சந்திக்க முடியவில்லை என்ற சிறு வருத் தம் அவரிடம் இருக் கத் தான் செய்யும். ஆனால், என்னுடைய வெற்றிகளில் அடுத்த கணமே அவற்றை மறந்து விடு வார் என்கிறா சர்மினி. கராத்தே போன்ற விளையாட்டுகளில் நம் சமூக பெண்கள் ஈடுபடுவது இப்போது அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர வேண் டும். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற துணிவை இது போன்ற விளையாட்டுகள் பெண் களுக்கு வழங்கும். அதுமட் டுமின்றி, தனியாளாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தால் யாரையாவது சார்ந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. என் அம்மா தனியாளாகத் தான் நின்றார்; என்னை வளர்த்தார்; எனக்கென்று ஓர் அடையாளத்தை வழங்கினார். தயங்கி நின்றால் சிறிய படியைக் கூட தாண்ட முடியாதே!
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்