செவ்வாய் 15, அக்டோபர் 2024  
img
img

தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம் - வட்டி விகிதங்களை குறைக்குமா ரிசர்வ் வங்கி !
செவ்வாய் 14 ஜூன் 2016 18:31:48

img

டெல்லி: மே மாதத்திற்கான மொத்தவிலை பணவீக்க விகிதம் 0.79% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தவிலை பணவீக்க விகிதம் 0.34% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தொடர்ந்து 2-வது மாதமாக சில்லரை வர்த்தக பணவீக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் சில்லரை வர்த்தக பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் 5.39 சதவீதமாக இருந்த பணவீக்கம் மே மாதம் 5.47 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும், உணவுப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக சில்லரை வர்த்தக பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி தேவையான காய்கறிகளின் விலை ஏப்ரல் மாதத்தை விட இருமடங்கு உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 4.82 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்கம், மே மாதத்தில் 10.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த பணவீக்க விகிதம் 6.32 சதவீதத்திலிருந்து 7.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பின்செல்

செய்திகள்

img
முற்றிலும் இலவசமான அழகு சாதன பயிற்சி 

குறைந்தது 3,500 ரிங்கிடிலிருந்து 20,000 ரிங்கிட்

மேலும்
img
ரான்சம்வேரை விட சக்திவாய்ந்த இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறது

வைரஸிலிருந்து கணினியை விடுவிக்க பிணைத் தொகை செலுத்த வேண்டும்

மேலும்
img
இசூசு நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

இசூசு மலேசியா செண்டிரியான் பெர்ஹாட்...

மேலும்
img
மொபைல் ஆப்களைப் பயன்படுத்தும் முன்பு இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில்...

மேலும்
img
பல மில்லியன் கணக்கான கணக்குகள் Hack செய்யப்பட்டது:

உறுதிப்படுத்தியது YAHOO!

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img