நீலாய்,ரோமானியாவில் நடைபெறும் அனைத்துலக பள்ளிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் நம் நாட்டை பிரதிநிதித்து பங்கு கொள்ளும் 16 பேர் கொண்ட குழுவில் மூன்று இந்திய மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். பாஜம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சிரம்பான் புக்கிட் கெபாயாங் இடைநிலைப் பள்ளியில் மூன்றாம் படிவம் பயிலும் பத்ம ரூபன் குமார் (வயது 15), நீலாய் தமிழ்ப்பள்ளியில் பயிலும் அமிர்தன் யோஹன் சின்னப்பர் (வயது 9), அகல்யா தியானா சின்னப்பர் (வயது 7) ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்திய சமுதாயத்திற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமையளிக்கிறது. அமிர்தன் யோஹன், அகல்யா தியானா இருவரும் அண்ணன் தங்கை ஆவர். இந்த அனைத்துலக சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் ஒருவருக்கு தலா 13,000 வெள்ளி சொந்த செலவை எதிர்நோக்கியுள்ளனர் என் பதை அறிவது மனவேதனையை அளிக்கிறது. நம் நாட்டிற்கு பெருமையை தேடித் தரவிருக்கும் இவர்களுக்கு அரசியல் சாரா அமைப்போ, அரசியல் கட்சி களோ அல்லது இந்திய அமைப்புகளோ ஒரு குறிப்பிட்ட செலவை ஏற்றுக் கொண்டால் தங்களுக்கு சுமை கொஞ்சம் குறையும் என்று இவர்களது பெற் றோர்கள் கோடிகாட்டினர். இன்று வியாழக்கிழமை சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் புறப்படும் இவர்கள், 1-5-2017 வரை நடைபெறும் சதுரங்கப் போட்டி யில் கலந்து கொள்வார்கள்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்