மலேசிய கடற்படை அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற மலேசிய மற்றும் பேரா பொது ஓட்டப் பந்தய போட்டியில் பல இந்திய போட்டியாளர்கள் வெற்றி பெற்றனர். எதிர்வரும் சீ விளையாட்டுப் போட்டிகளில் தங்களது திறமையை தயார்ப்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து மாநில ஓட்டப் பந்தய போட்டி யாளர்களுடன் ராணுவப் படை, விளையாட்டு மன்றங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போட்டியாளர் களுடன் சிங்கப்பூர் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். மலேசியா மற்றும் பேரா மாநில பொது ஓட்டப்பந்தயம் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில், ஷீலா ( சிலாங்கூர்) பெர்க்மன்ஸ் (சிலாங்கூர்), ராய்ஸன் (ராணுவப்படை) ஆகியோர் 1500 மீ போட்டியிலும், சங்கீதா (கோலாலம்பூர்) 5000மீ, தேவன் ( நெகிரி செம்பிலான்) 10,000மீ, தினேஷ் ராஜா (சிலாங்கூர் 3000 தடை ஓட்டத்திலும், பிரபுதாஸ் (கடற்படை) 5000மீ, தனலட்சுமி (மலேசிய விளையாட்டு மன்றம்) 200 மீ போட்டிகளி லும் தங்கப் பதக்கம் பெற்றனர். பேரா மாநில ஓட்டப் பந்தய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட தகுதி நேரம் மற்றும் தூரத்தை அடைந்தவர்கள் எதிர் வரும் சீ விளையாட்டுப் போட்டிகளில் மேலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புவதாக மலேசிய ஓட்டப் பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோ கரிம் தெரிவித்தார். மலேசிய பிரிவிலும் பேரா பொது ஓட்டப் பந்தய பிரிவிலும் மலேசிய ராணுவப் படையினர் வெற்றி பெற்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்