பெட்டாலிங் ஜெயா, ஏப். 19- சுங்கை பூலோ சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இரு கும்பல்களுக்கிடையிலான கைகலப்பில் குத்திக் கொல்லப்பட்ட ஆடவர் சீ விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற முன்னாள் குத்துச் சண்டை வீரர் ஜி.ராம்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிள்ளானில் நிகழ்ந்த ஒரு கடத்தல் சம்பவம் தொடர்பில் ராம்குமார் சிறைவாசம் அனுபவித்து வந்தார். 2013-ஆம் ஆண்டில் மியான்மாரில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டிகளில் 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இரண்டாவது வெற்றியாளராக வாகை சூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ தினத்தன்று, பிற்பகல் 12.30 மணிக்கு இரு கும்பல்களுக்கிடையே மோதல் நிகழ்ந்ததாகவும் அதில், ராம்குமார் (25) கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டதாகவும் சுங்கை பூலோ போலீஸ் தலைவர் முகமட் ரோஸி ஜிடின் கூறினார். இக்கைகலப்பில் மேலும் பலரும் காயமடைந்ததாக அவர் சொன்னார். சண்டைக்கான காரணமும், கைதிகளுக்கு ஆயுதம் எவ்வாறு கிடைத்தது என்பதும் ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ராம்குமாருக்கும் அவரைத் தாக்கியவர்களுக்கும் இடையே கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி மோதல் நிகழ்ந்திருப்பதை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. தனிச்சிறையில் அடைக்கப்பட்ட அவர், சம்பவ தினமான கடந்த சனிக்கிழமை தனது வழக்கமான சிறைக்கு அனுப்பப்பட்டார். பன்னிரண்டுக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இக்கைகலப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. நிலைமையைக் கட்டுப்படுத்திய சிறை பாதுகாவலர்கள் பிறகு போலீசாரை வரவழைத்தனர். ராம்குமார் ஒரு தலைசிறந்த தேசிய குத்துச்சண்டை வீரராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்