சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் நேற்று மோதிய சிந்து 10-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 21-15 என கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், சிந்து 10-21, 21-15, 21-20 என்ற செட் கணக்கில் ஒரு மணி, 2 நிமிடம் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2016 ஆல் இங்கிலாந்து தொடரில் நஸோமி ஓகுஹரா சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது சுற்றில் சிந்து இந்தோனேசியாவின் பிட்ரியானி பிட்ரியானியுடன் மோதுகிறார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்