செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

கால்பந்து சூதாட்டாத்தில் ஈடுபடும் ஆட்டக்காரர் அதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை!
ஞாயிறு 09 ஏப்ரல் 2017 13:29:31

img

கால்பந்து சூதாட்டத்தில் ஈடுபடும் ஆட்டக்காரர்கள், அதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் துங்கு இஸ்மாயில் நேற்று அறிவித்தார். கால்பந்துப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் சூதாட்ட விவகாரம் நாட்டின் கால்பந்துத் துறையில் தலைதூக்க தொடங்கி விட்டது. இந்த சூதாட்டம் என்பது கால்பந்து விளையாட்டிற்கு மிகவும் எதிரானது. இவ்விவகாரத்தில் சிக்கும் ஆட்டக்காரர்கள், அதிகாரிகளை எப்ஏஎம் ஒருபோதும் மன்னிக்காது. அவ்வகையில் கால்பந்து சூதாட்டத்தில் சிக்கும் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும்.இத்தடையை பெறும் ஆட்டக்காரர்களும், அதிகாரிகளும் எந்தவொரு சூழ்நிலையிலும் மீண்டும் கால்பந்துத் துறைக்கு திரும்ப முடியாது என்று துங்கு இஸ்மாயில் கூறினார்.எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகக் குழு தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு பின்னர் எப்ஏஎம்மின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட தெங்கு மக்கோத்தா ஜொகூர் துங்கு இஸ்மாயில் தலைமையில் முதல் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று சபாவில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு பின் துங்கு இஸ்மாயில் செய்தியாளர்களிடம் பேசினார். எப்ஏஎம் நிர்வாகக் குழு கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக கால்பந்து சூதாட்ட விவகாரம் இக்கூட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தது.அதன் பின்னர் மலேசிய லீக்கில் விளையாடும் அணிகளுக்கான 90 லட்சம் வெள்ளி நிதி அடுத்த வாரத்தில் ஒப்படைக்கப்படும். அவ்வகையில் சூப்பர் லீக்கில் விளையாடும் 12 அணிகளுக்கு தலா 5 லட்சம் வெள்ளியும், பிரிமியர் லீக்கில் விளையாடும் அணிகளுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும் நிதியாக வழங்கப்படும்.சர்ச்சை ஏற்படுத்தி வரும் ஹரிமாவ் மலாயா அணியின் தலைமை பயிற்றுநர் விவகாரத்திற்கு எப்ஏஎம் விரைவில் தீர்வு காணும். இவ்விவகாரம் குறித்து பல வெளிநாட்டு பயிற்றுநர்களுடன் தாம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிஎம்ஜே கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img