தஞ்சோங்மாலிம், ஏப். 9- பேரா மாநில பள்ளிகளுக் கான திடல் தடப் போட்டி யில் வட கிந்தா மாவட்டம் 30 தங்கம், 20 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.பேரா மாநில பள்ளிகளுக்கான திடல் தடப் போட்டிகள் அண்மையில் தஞ் சோங்மாலிமில் உள்ள உப்சி அரங்கத்தில் 4 நாட்களுக்கு நடைபெற்றது. இப்போட்டியில் களமிறங்கிய கிந்தா மாவட்ட குழுவினர் சிறப்பான திறனை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றனர். இப் போட்டியில் இரண்டாவது நிலையில் வந்த லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம் 19 தங்கம், 24 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களும் பெற்ற வேளை யில் பேரா விளையாட்டுப் பள்ளி 17 தங்கம், 16 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 110 தங்கம், 108 வெள்ளி, 109 வெண்கலப் பதக்கங்களை வெல்வதற்கான போட்டிகளில் மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 11, 12, 14, 15, 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பத்தாங் பாடாங் தேவன்ராஜ் (வயது 18) 5000மீ, 3000மீ. தடை ஓட்டத்திலும், லாருட் மாத் தாங் செலாமா மாவட்டம் பிரேமநாதன் (வயது 18) நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல் போட்டிகளிலும், தென் பேரா திலகவதி (வயது 15) 400மீ., 800மீ ஓட்டத்திலும், நிஷா (வயது18) 1500மீ., 2000மீ. தடை ஓட்டத்திலும் தலா இரு தங்கப் பதக்கங்களை வென்றனர். வடகிந்தா மோகனகுமரன் (வயது 15) 800மீ., தி. லோகனேஸ் (வயது15) 400மீ., மகேந்திர அர்ஜுன் (வயது 18) 200மீ, லாருட் மாத்தாங் செலாமா சுபாஷ் காரிகேஸ் (வயது 18) 800மீ, யோகேஸ்வரி (வயது 18) 200மீ, தென் பேரா அபலாஷினி (வயது12) நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்றனர். போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில கல்வி இயக்குநர், துணை இயக்குநர் மற்றும் மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள் பதக்கங்களை எடுத்து வழங்கினர்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்