கடந்தாண்டின் சிறந்த அடைவுநிலை பெற்ற வீரர்களுக்கான ஆசிய ஸ்குவாஷ் விருது விழாவில் மலேசியா மூன்று விருதுகளைப் பெற்று மகத்தான சாத னையை படைத்துள்ளது.சென்னையில் நடக்கவிருக்கும் இந்த விருது விழாவில் சிவசங்கரிக்கு ஹசான் மூசா ஜூனியர் என்ற விருது கிடைக்கவுள்ளது. கெடா அலோர்ஸ்டாரைச் சேர்ந்த சிவசங்கரி 8 வயது முதல் ஸ்குவாஷ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். 2009-இல் சிஐஎம்பி நடத்திய தேசிய ஸ்குவாஷ் போட்டியில் இவர் முதல் முறை வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து இன்றளவும் 94 போட்டிகளில் பங்கெடுத்து இளம் வயதில் பெரும் சாதனை படைத்துள்ளார். தற்போது 18 வயதான இவர் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று ஸ்குவாஷ் விளையாடி வென்றுள்ளார். பி.எஸ்.ஏ உலக கிண்ண போட்டியின் ஜூனி யர் பிரிவில் இவர் முதல் தேர்வு சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து இங் ஏன் யோவுக்கும் ஹசான் மூசா ஜூனியர் என்ற விருது கிடைக்கவுள்ளது. அதே வேளையில், ஜூனியர்பிரிவின் சிறந்த பயிற்சியாளர் விருதை நாட் டின் இளையோர் பிரிவின் தலைமை பயிற்சியாளர் ஒங் பெங் யீ தட்டிச் செல்லவுள்ளார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்